erode news today in tamil-கோபி அருகே கோவிலில் உண்டியல் திருட்டு

erode news today in tamil- காட்டுக்குள் கிடந்த கோவில் உண்டியல்.
erode news today in tamil- கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் இந்திரா நகரில் அண்ணமார் கோவில் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்வது, வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி நல்லசாமி என்பவர் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில், திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லசாமி உள்ளே ஓடிச்சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் வைக்கப்பட்டு இருந்த 2 உண்டியல்களும், பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தது தெரிந்தது
இதுகுறித்து பூசாரி நல்லசாமி கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதேபோல் மோப்பநாயும் கொண்டுவரப்பட்டது. அது உண்டியல் இருந்த இடத்தில் இருந்து ஓடி கோவில் அருகே உள்ள தோட்டப்பகுதியில் போய் நின்றது. இதனால் போலீசார் தோட்டத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 உண்டியல்களும் அங்கு கிடந்தன.
உண்டியல்களில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. உண்டியல்களை திருடியவர்கள், பின்னர் தோட்டத்தில் வைத்து உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu