வியாபாரிகளிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்

வியாபாரிகளிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிமுதல்
X
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் மற்றும் வடுகபாளையம் ஆகிய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 10 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் திருவானைக்கோயில் பகுதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் வாழை வியாபாரம் செய்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள சம்ராஜ்நகரில் டிராக்டர் வங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக முத்தமிழ்செல்வன் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது டிராக்டர் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருந்த போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது மினி லாரியில் இருந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சித்திக் என்பவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள விவசாயிகளிடம் வாழைத்தார் வாங்குவதற்காக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட பணம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி .ஓ அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
why is ai important to the future