கோபிச்செட்டிபாளையம்: நாய்கள் கடித்து குதறியதில் மான் குட்டி உயிரிழப்பு

கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள டிஎன் பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதியில், விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மான் குட்டி, நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக , விலங்குகள் அருகேயுள்ள விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் வருகின்றன.

கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் காலனியில் உள்ள விவசாய தோட்டத்தில் வாழை, கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. அந்த தோட்டத்தில் முகாமிட்டு இருந்த புள்ளி மான்களில், சுமார் 3 வயதுடைய ஒரு ஆண் குட்டிமான், நேற்றிரவு தாயை விட்டு பிரிந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து குட்டி மானை கடித்து குதறியது. படுகாயமடைந்த குட்டி மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இன்று காலையில் அந்த வழியாக விவசாய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இறந்த கிடந்த மானை பார்த்துள்ளனர். இதுகுறித்து டி.என்.பாளையம் வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் புள்ளிமனை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குட்டியை இழந்த தாய் மான் தனது குட்டிகளுடன் விவசாய தோட்டத்தில் அலைமோதி வருகிறது. விவசாயத் தோட்டத்தில் சுற்றிவரும் அந்த மான்களை பிடித்து வனப்பகுதில் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்