கருப்பு பூஞ்சை நோய்க்கு ஈரோட்டில் படுக்கை வசதி, மருந்து தயார்: அமைச்சர்

கருப்பு பூஞ்சை நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகள், தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக, தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆலம் பவுண்டே~ன் சார்பில் மருத்துவனைக்கு தேவையான கட்டில், மெத்தை,சக்கர நாற்காளி, ஆக்ஸி பல்ஸ் மீட்டர் உள்ளிட்ட உபகரனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு கட்டில், மெத்தை, சக்கர நாற்காளி, ஆக்ஸி பல்ஸ் மீட்டர் உள்ளிட்டவற்றை மருத்துவமனை அலுவலர்களிடம் வழங்கினார். தொடந்து மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், மருத்துவ அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம், பவானி அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 100 முதல் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்ப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆரம்பகட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பள்ளி கல்லுரிகளில் 3500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் தாமாக முன்வர வேண்டும். சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கப்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு, தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது எறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!