கொடிவேரி பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு: எம்எல்ஏ ஆய்வு

கொடிவேரி பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு: எம்எல்ஏ ஆய்வு
X
கொடிவேரி பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை, கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி பகுதியில், ரூ.21 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 256 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடப் பணிகளை முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து பவானிசாகர் அணையில் இருந்த கொடிவேரிக்கும் வரும் நீர்வரத்து குறித்தும், கொடிவெரி தடுப்பணையில் வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் குறித்தும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உட்பட அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!