100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி மராத்தான்

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி மராத்தான்
X

உலக மகளிர்தினம் மற்றும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையத்தில் மினி மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு விதங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய்துறை சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டியும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ,வலிமையான மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மினி மராத்தான் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த மினி மராத்தான் போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் பழனிதேவி கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த மினி மராத்தான் போட்டியானது கச்சேரிமேடு பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் தொடங்கி காவல்நிலையம், நீதிமன்ற வளாகம், ல.கள்ளிப்பட்டி வழியாக நல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. முன்னதாக கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். இவ்விழாவில் தாசில்தார் தியாகராஜு ,வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil