10, 12 பொது தேர்வுகள் எப்போது? செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் கோழி அபிவிருத்தி திட்டம் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகளும், 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகளையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.பின்னர் செய்தியாளா்களிடம் கூறுகையில், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது தான் வழக்கம். ஆனால் தமிழக முதலமைச்சர் தேர்தலுக்கு முன்னரே விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது குறித்து இன்னும் அரசு பரிசீலிக்கவில்லை. பத்துக்கும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு தற்போதைக்கு மட்டுமே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி வந்தவுடன் பொது தேர்வுகள் பற்றிய அட்டவணை வெளியிடப்படும். 12 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயற்சி அளிக்க அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லை. அதனால் தனியார் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன், கால்நடை பாராமரித்துறை இணை இயக்குநர் வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu