டாஸ்மாக் பணியாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் பணியாளரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை
X

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் டாஸ்மாக் விற்பனையாளர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வரப்பாளையம் அருகே உள்ள குமாரபாளையத்தில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் விற்பனையாளராக ஆறுமுகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு விற்பனை முடிந்த பிறகு மது விற்பனை செய்த 2 லட்சம் ரூபாயுடன், இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்தார் .கெடாரை என்ற இடத்தில் அவர்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேர், ஆறுமுகம் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து சென்றனர். சம்பவம் குறித்து வரப்பாளையம் காவல்நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story