வேகமாக நிரம்பும் குண்டேரிப்பள்ளம் அணை...

#குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த #தொடர் மழை #அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபாநகர் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் பாசனத்திற்கு மட்டுமல்லாமல் வனவிலங்குகளின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கம்மனூர், விளாங்கோம்பை, மல்லியம்மன்துர்க்கம், குன்றி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து உள்ளது. இந்த மழையால் காற்றாறுகளின் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு செம்மண் கலந்த நீராக வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் முழு கொள்ளளவு 42 அடியாகும். நேற்று முன்தினம் 30 அடிக்கும் குறைவாக இருந்த நீர் மட்டம் 6 அடி உயர்ந்து 36 அடியாக இருந்தது. நேற்று குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் 58 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 39.39 அடியாக உள்ளது. தொடர்ந்து இன்றும் மழை தொடருமேயானால் அணையின் முழு கொள்ளவான 42 அடியும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையின் அருகில் வசிபவர்கள் மேடான பகுதிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கால்நடைகள் மேய்க உபரிநீர் ஓடையில் யாரும் இறக்கவேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil