உலக அறிவியல் தினத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி இராமன் 'இராமன் விளைவு' கண்டுபிடித்ததை நினைகூரும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் புவி வெப்பமயமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் ஊராட்சி சில்லாமடை என்னும் கிராமத்தில், மின்போதி அறக்கட்டளையுடன் இணைந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கிராம பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக ஆயிரம் மரக்கன்றுகளை கிராமப்பகுதிகள் முழுவதும் நடவு செய்தனர்.
இதில் மகிழம், வேம்பு, வில்வம், இயல்வாகை கருங்காலி, இலுப்பை போன்ற மருத்துவ குணமுள்ள ஆயிரம் மரங்களை நடவு செய்து பாதுகாப்பு வேலி அமைத்தனர். மேலும் ஒவ்வொரு மரங்களின் குணங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்து கிராம மக்களுக்கு விளக்கமளித்ததுடன் ஒரு மரத்தை வளர்த்து பாராமரிக்க இரண்டு பேர் வீதம் நியமித்துள்னர். அவர்கள் மரங்களை வளர்த்து பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இலுப்பை மரம் பெரும் பங்கு வகிக்கிறது. இலுப்பை மரம், விவசாய விளை பயிர்களை உண்டு சேதபடுத்தக் கூடிய பூச்சிகளை தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்ளக் கூடிய பண்புடையது என்றும் இந்த பூச்சிகளை உண்ண, எறும்புகள், குருவிகள் மற்றும் வவ்வால்கள் இலுப்பை மரத்தை நாடி இயற்கையின் சுழற்சிக்கு வழிவகுக்கும். இவ்வளவு நற்குணங்கள் கொண்ட இலுப்பை மரம் இன்று தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் மரங்கள் தமிழகத்தில் இருந்தன ஆனால் இன்று ஐயாயிரத்திற்கும் கீழ் குறைந்து விட்டது. இதை மீட்டெடுக்கும் முயற்சியாக அதிகளவு இலுப்பை மரங்களை நடவு செய்துள்ளதாகவும், இந்த மரம் நடும் முயற்சியில் மின் போதி அறக்கட்டளையுடன் இணைந்து தன்னார்வலர்கள் செல்வராஜ், சண்முகம் - வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து கிளார்க் கௌதம் மற்றும் முன்னாள் யூனியன் உறுப்பினர் ஞானசுந்தரம் ஆகியோர்கள் கிராம பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரங்களை நடவு செய்தனர். இதனை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu