தேர்தலுக்கு முன் பொதுத்தேர்வு ? அமைச்சர் பதில்

தேர்தலுக்கு முன் பொதுத்தேர்வு ? அமைச்சர் பதில்
X

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கர்பாளையம் வினோபா நகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளதாகவும் வனத்துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலை பொறுத்த வரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதற்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறினார்.

நாளை பிளஸ் 2 தேர்வில் எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர் என்பது அறிவிக்கப்படும் என்றும் ஒரு அறைக்கு 25 பேர் வரை இருக்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தோ்வு மையங்களை அதிகப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் பள்ளிக்கு வராத மாணவர்கள், பெற்றோர் அனுமதியுடன் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது