பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பமில்லை -செங்கோட்டையன்

பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பமில்லை -செங்கோட்டையன்
X

பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பில் குழப்பம் இல்லையென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான உள்விளையாட்டு அரங்கத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், சி.பி.எஸ்.சி பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவொரு விளையாட்டிலும் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை என்றும் மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ. 35 கோடி கேட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் நூலகங்களில் உள்ள காலிபணியிடங்களை தற்காலிக ஆட்கள் கொண்டு நிரப்பப்படும் என்றார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி