திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
X
தனியார் பள்ளிகளில் 100 % கட்டணத்தை செலுத்த பெற்றோர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். –அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்; அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் அதிமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்தியாவில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் செய்ய முடியாது. திட்டமிட்டபடி நாளை 9 மற்றும் 11 பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணத்தை செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இவ்விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் ஹரிபாஸ்கர் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future