சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை: கே.ஏ.செங்கோட்டையன்

சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை: கே.ஏ.செங்கோட்டையன்
X
தினமும் கிருமினாசி தெளித்து சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒடையாகவுண்டன்பாளையத்தில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.38.17 கோடி மதிப்பீட்டில், 384 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகளை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம், மூத்த அமைச்சர் என்ற முறையில் சசிகலா வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு கையெடுத்து கும்பிட்டு சென்றார். நாங்கள் எங்கள் வேலையை கூறுகிறோம். பள்ளி திறப்பது குறித்து முதல்வர் தான் அறிவிப்பார் என்று கூறினார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்களுடன் கருத்து கேட்டபின் அறிவிக்கப்படும். நீட்த்தேர்வில் 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் தற்போது 5 ஆயிரம் பேர் தான் பயிற்சி பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த கேள்விக்கு மருத்துவர்கள் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் போன்றவர்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதற்கு பிறகு மத்திய அரசு கூறும்படி தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார். மேலும் பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு தினமும் கிருமினாசி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் அப்படி சுத்தம் செய்யாது பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil