மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு- செங்கோட்டையன்

மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு- செங்கோட்டையன்
X

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கீரிப்பள்ளம் ஓடை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் பணிகள் முடிந்த பிறகு பார்த்தால் அதன் நிறை மக்களுக்கு தெரியவரும் என்றும் அதேபோல் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர்ச் டூ ஆர்ச் வரையிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஒரு சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் போது வழங்கப்படும் எனவும் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture