கோபிசெட்டிபாளையம்: போலியோ சொட்டு மருந்து முகாம்

கோபிசெட்டிபாளையம்: போலியோ சொட்டு மருந்து  முகாம்
X
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் 1978-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் முக்கிய பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மட்டும் 43 ஆயிரம் மையங்களில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி காலை 8 மணிக்கு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுகாதாரத்துறையினர் நகராட்சி அலுவலர்கள் தன்னார்வார்வலர்கள் வருவாய்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமினை ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil