மாநில அளவிலான கபடி போட்டி
கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பெண்களுக்கான பிரிவில் ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
கால் இறுதி, அரையிறுதி, இறுதி போட்டி என பல்வேறு கட்டங்களாக கபாடி போட்டி இரவு பகலாக நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதி போட்டியில் கோபியை சேர்ந்த பி.கே.ஆர்.மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் அணியும் திருப்பூர் ஜெயசித்ரா அணியும் மோதியது. ஆட்ட தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதிய நிலையல் இறுதியில் திருப்பூர் ஜெயசித்ரா அணி 26 புள்ளிகளும், கோபி பி.கே.ஆர்.மகளிர் கல்லூரி அணி 25 புள்ளிகள் பெற்று ஒரு புள்ளி வித்தியாசத்தில் திருப்பூர் ஜெயசித்ரா அணி வெற்றி கோப்பையையும் பரிசு பணம் ரூ.40 ஆயிரத்தையும் தட்டிச்சென்றது. இரண்டாவது பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பையை கோபி பி.கே.ஆர் கல்லூரி அணியும், மூன்றாவது பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் சுழல் கோப்பையை சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலமைச்சர் கோப்பை மற்றும் விருதுகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu