கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை
X
இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்து உள்ளது கொடிவேரி தடுப்பணை. அருவிக்கு பண்டிகை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். மேலும் பொங்கல் பண்டிகையை ஒட்டிவரும் மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடா் விடுமுறை என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே கொரானா தெற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பூங்காக்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Tags

Next Story
ai healthcare technology