கூகலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழா

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் ஒரே இடத்தில் ஆயிரம் பொங்கல் வைத்தும் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடினர்.

பாரதிய ஜனதாகட்சியின் மாநிலதலைவர் எல்.முருகன் பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல இடங்களில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்டம் எனும் தலைப்பில் பாரதி ஜனதாகட்சியினர் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட பாரதிய ஜனதாகட்சியின் மகளிரணியினர், மண் பானையில் ஒரே இடத்தில் ஆயிரம் பொங்கல் வைத்தும் கும்மிடித்தும் குலவை எழுப்பியும் பொங்கல் விழாவை கொண்டாடினர். மேலும் இந்த பொங்கல் விழாவில் பாராம்பரிய கலைகளை போற்றும் விதத்தில் மயிலாட்டம் கரகாட்டம் பொய்கால் குதிரை போன்ற கலைகளும் இடம் பெற்றிருந்தன. அதனைதொடர்ந்து சிலம்பாட்டம், வாள் சண்டை, போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.

Tags

Next Story