கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கத் தடை

கொடிவேரி அணையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிமாக இருக்கும் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை ஜனவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் அருவியில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது கொடிவேரி தடுப்பணை. இந்த அருவியில் குளிப்பதற்காகவும், அங்குள்ள கடைகளில் விற்கப்படும் ஆற்று மீன் வருவலை ருசிப்பதற்காகவும் கூட்டம் அதிகம் வரும். ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் பண்டிக்கை மற்றும் விடுமுறை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

கடந்த 8 மாதங்களாக கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது இந்த அருவி மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 10 நாட்களாக பொதுமக்களின் பார்வைக்காகவும், குளிப்பதற்கும் கொடிவேரி தடுப்பணை அருவி திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புத்தாண்டு விடுமுறை அன்று கொடிவேரி அணையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிமாக இருக்கும் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கும், அருவியில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் நோய் இரண்டாவது கட்டமாக பரவி வருவதால், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தாண்டு முடிவுற்ற பின் இந்த தடை நீக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!