கோயில்திருவிழா நடத்த வேண்டி ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம்
இத்திருவிழாவில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கானோர்கள் தீக்குண்டம் இறங்கியும் தேர் இழுத்தும் தங்களது நேர்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். அதேபோல் திருவிழாவின் கடைசி நாளில் நடைபெறும் மலர் பல்லக்கு நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.
இந்தாண்டு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவிழா ரத்து செய்யப்படுவதாக தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதனை தொடர்ந்து திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை கோயில் முன்பு திரண்ட பக்தர்கள் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள திருவிழா ரத்து அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோயில் திருவிழாவை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெறவேண்டும் என கோசங்கள் எழுப்பினர். ஆதனை தொடர்ந்து பக்த்தர்கள் கூறுகையில் கொரோனா தொற்று உள்ள நிலையிலும் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் விழாகள் நடைபெற்று வருகிறது. பாரியூர் கொண்டத்துக்காளியம்மன்கோயிலுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து கடந்தாண்டு பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திகடன் வைத்துச்சென்றிருப்பர். இந்நிலையில் கோயில் திருவிழா ரத்து செய்தால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் அதனால் தமிழக அரசும் இந்து அறநிலையத்துறையும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் கோயிலுக்குள் குறைந்தளவு பக்தர்களை அனுமதித்து திருவிழா நடைபெற உத்தரவு வழங்கவேண்டும் என்றும் திருவிழா ரத்து செய்த அரசாணையை திரும்பப்பெறவேண்டும் என்றும் கோரிக்கைவைத்தார்.
திருவிழா ரத்து செய்யபடுவதால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu