கோபிச்செட்டிபாளையத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் 155 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 218 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், 556 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, 16 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 3 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனம் எனமொத்தம் 968 பயனாளிகளுக்குரூ.1 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 474 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பேசுகையில், "இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் அரசாகவும், ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினிவழங்கும் அரசாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் அரசுபள்ளி ஏழைஎளிய மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் 405 மாணவர்களுக்கு மருத்துவ கனவை நிறைவேற்றிய அரசாக உள்ளது. இதற்காக 16 கோடிரூபாய் ஒதுக்கி மருத்துவம் பயில மற்றும் தங்கும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாக்கிய அரசு தமிழக அரசு , எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத முயற்சிகளை தமிழக அரசு செய்து கொண்டுள்ளது தமிழக அரசின் வேகத்தையும் விவேகத்தையும் பார்த்து அனைவரும் அஞ்சி நடுங்கும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றும் அரசாக உள்ளது" என பேசினார்.
இவ்விழாவில் மாவட்டவருவாய் அலுவலர் கவிதாகோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார் தியாகராஜு நிலவருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார் மற்றும் கழகநிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu