மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர்

மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர்
X
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற தலைவர் நாகராஜ்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவரான நாகராஜ், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு‌.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி தொடங்கப்பட்டு 73 ஆண்டுகள் ஆன நிலையில், முதன்முறையாக இந்த தேர்தலில் நகராட்சியை திமுக கைப்பற்றியது. கோபி நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த நாகராஜ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி தலைவர் நாகராஜ், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future