கோபி: ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்

கோபி: ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்
X

கோபி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளையில் பணியாற்றும் 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 வட்டாரங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் 860-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர் இம்மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சி செயலர்கள் உட்பட ஒன்றிய அலுவலக ஊழியர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக பணி நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் செயலை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நான்கு கட்ட போராட்டங்களை அறிவித்து கடந்த 10.09 2022 முதல் இதுவரையில் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில், தாளவாடி ஒன்றியத்தில் உள்ள தலமலை ஊராட்சி செயலராக பணியாற்றி வந்த முத்தன் என்பவர் அதிக பணிச்சுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பணியிலிருந்த போதே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறை ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற வேண்டிய வழக்கமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!