ஈரோட்டில் ஆடு திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்

ஈரோட்டில் ஆடு திருடிய நபரை போலீஸார்  கைது செய்தனர்
X
ஈரோடு கனிராவுத்தர்குளத்தில் உள்ள கறிக்கடையில் ஆடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்

ஈரோடு சின்னசேமூர், கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். அதே பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். கடையின் பின்புறம் வீடு உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டியில் இருந்து இரண்டு ஆடுகளை வாலிபர் ஒருவர் திருடிக்கொண்டு செல்ல முற்பட்டார். கையும், களவுமாக பிடித்து வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், பவானி ஓரிச்சேரிபுதூரை சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் ( 22) என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, திருடிச்சென்ற ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!