வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
பைல் படம்.
ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 19 லட்சம் பேர் உள்ளனர். இதில் முதற்கட்ட தடுப்பூசி 13.50 லட்சம் பேரும், 2-ம் கட்ட தடுப்பூசி 5.80 லட்சம் பேரும் செலுத்தி உள்ளனர். முதற்கட்ட தடுப்பூசி செலுத்தாத 4.50 லட்சம் பேர் உள்ளனர். வயது முதிர்வு, நோய், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இவர்கள் முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்துவது இல்லை. எனவே இவர்களது வீடுகளுக்கு சென்று, தடுப்பூசி செலுத்த முடிவு செய்து, கடந்த 6-ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று விசாரித்து தடுப்பூசி செலுத்துகின்றனர். மாவட்ட அளவில் 219 பேர் கொண்ட குழு அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில், டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள் நேரடியாக ஈடுபட்டு தடுப்பூசி போடாதவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்துகின்றனர். வரும், 30-ம் தேதிகுள் 4.50 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu