பவானி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ராணுவ வீரர் போக்சோவில் கைது

பவானி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ராணுவ வீரர் போக்சோவில் கைது
X

கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் லோகேஷ்.

பவானி அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக லோகேஷ் என்ற ராணுவ வீரரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ், ராணுவ வீரரான இவர் பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது விடுப்பில் சொந்த ஊருக்கு வரும்பொழுது 18 வயது பூர்த்தி அடையாத அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு ஆசை வார்த்தைக்கு கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இளைஞர் பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ராணுவத்தினருக்கு இளைஞர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞர் லோகேஷ் ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராணுவ வீரர் லோகேஷை போக்சோ வழக்கில் கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture