அந்தியூர் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த பெண்: பெற்றோர்‌ போலீசில் புகார்

அந்தியூர் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த பெண்: பெற்றோர்‌ போலீசில் புகார்
X

இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்த பெண்.

அந்தியூர் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கெட்டிசமுத்திரம் கே.கே.நகரை சேர்ந்த மகேந்திரன் (40). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று ஈரோடு ஏடிஎஸ்பி பாலமுருகனிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: எனக்கு 2 மகள்களும் , 1 மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு 19 வயதாகிறது. 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி திருமணம் நடத்திட நிச்சயம் செய்து இருந்தோம். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அதிகாலை வீட்டைவிட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். ஆனால், அன்றைய தினமே பவானி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் என் மகள் இருப்பதாக தகவல் வந்தது.

அங்கு சென்றபோது, என் வீட்டில் அருகே வசிக்கும் 25 வயது கொண்ட பெண் எனது மகள் திருமணம் செய்து கொண்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் மகளை வீட்டுக்கு அழைத்தேன். ஆனால் வர மறுத்து விட்டார். என் மகள் திருமணம் செய்ததாக கூறப்படும் பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்.கடந்த ஓராண்டாக என் மகளை மூளைச்சலவை செய்து கஞ்சா, போதை மாத்திரை பழக்கத்திற்கு உட்படுத்தியுள்ளது தெரியவந்தது. என் மகளை ஏமாற்றிய பெண், அவரது தம்பி ஆகியோர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளனர்.

மேலும், ஊரில் வசதியில்லாத பெண்களை அணுகி, என் மகளை திருமணம் செய்த பெண் உட்பட சிலர் கரு செய்த முட்டை எடுக்கவும் வற்புறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எனவே, மாவட்ட காவல் துறை நிர்வாகம் முறைப்படி விசாரணை நடத்தி, என் மகளையும், அவர் திருமணம் செய்த பெண்ணையும் மருத்துவ பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்