அந்தியூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய நபர் கைது‌

அந்தியூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய நபர் கைது‌
X

கைது செய்யப்பட்ட மாரசாமி

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னபருவாச்சி செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் மாரசாமி (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் போலீசார் மாரசாமியின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மாரசாமியை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story