கோபியில் உள்ள மாவட்ட சிறையில் கைதியிடம் கஞ்சா, செல்போன் பறிமுதல்
கோபியில் உள்ள மாவட்ட சிறை.
கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியிடம் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறையில் செல்போன், கஞ்சா பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்தது.
இத்தகவலை அடுத்து இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு வடக்கு காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாபுராஜ்(30) என்ற விசாரணை கைதியிடம் இருந்து பட்டன் டைப் செல்போன், பேட்டரி, கஞ்சாவை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிறைக்குள் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதியிடம் இருந்து செல்போன், பேட்டரி மற்றும் கஞ்சா கிடைத்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே சிறையில் விசாரணை கைதி ஒருவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், பேட்டரி, இயர்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைதியிடமிருந்து செல்போன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu