ஈரோடு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு

ஈரோடு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு
X
அந்தியூரில் இன்று மாலை விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்த படம்.
ஈரோடு நகரில் நாளை (3ம் தேதி) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர், கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி. நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 900-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பொதுமக்கள் சார்பில் தனியாக சுமார் 600 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி மாவட்டத்தில் இடங்களில் விநாயகர் சிலைகளைக் கரைக்க போலீசார் வரும் 5-ம் தேதி வரை அனுமதி அளித்துள்ளனர். ஈரோடு நகரில் நாளை 3ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன. அதன்படி, நாளை மாலை 3 மணியளவில் சம்பத்நகரில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன. அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. கோஷங்கள் எழுப்பக் கூடாது.மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளைை போலீசார் விதித்துள்ளனர்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா