முழுமையாக நிரம்பிய அந்தியூர் வேம்பத்தி ஏரி

முழுமையாக நிரம்பிய அந்தியூர் வேம்பத்தி ஏரி
X

மலர் தூவி வரவேற்ற அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார்.

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஏரியானது 11 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் வேம்பத்தி ஏரியின் முழு கொள்ளளவு 13 அடியாகும். இந்த ஏரிக்கு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரி நேற்று முழு கொள்ளளவை எட்டியது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முழு கொள்ளளவை ஏரி எட்டியுள்ளது. இதுபற்றி அறிந்ததும், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் அங்கு சென்று ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற கூடிய பகுதியில் மலர்தூவி வரவேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!