அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதி விபத்து: ஒருவர் பலி

அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு லாரி  மோதி விபத்து: ஒருவர் பலி
X

பைல் படம்.

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னகுரும்பபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவரது நண்பர் மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரும் சித்தார் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சித்தாரிலிருந்து குறிச்சி நோக்கி வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரபாகரன் பவானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!