கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு

கூத்தம்பூண்டி அருகே சாலை விபத்தில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த டிரைவர் முனுசாமி.

கூத்தம்பூண்டி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 32). சொந்தமாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை முனுசாமி இரு சக்கர வாகனத்தில் ரைஸ்மில் பிரிவில் இருந்து கூத்தம்பூண்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, முனியப்பன் கோவில் வளைவு அருகே சென்றபோது, எதிரே வந்த கூத்தம்பூண்டி புடவைக்காரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த கணேஷ் பாபு (வயது 21) என்பவர் வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த முனுசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட கணேஷ்பாபு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture