விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்துக்கு நூல்கள் ஆவணங்கள் அளித்து உதவ வேண்டுகோள்

விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்துக்கு நூல்கள் ஆவணங்கள் அளித்து உதவ  வேண்டுகோள்
X

லோகோ

இந்திய சுதந்திரத்தின் 75 -ஆம் ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டின் வரலாற்று ஆய்வு மையத்தை முழுமைப்படுத்திட முடிவு செய்யப்பட்டது

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நிறுவப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வு மையத்துக்கு நூல்கள் மற்றும் ஆவணங்கள் கொடுத்து உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:



இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கை முழுமையாக வெளிக் கொண்டுவர கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பலவித தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்தத் திசை வழியிலான எமது தொடர்ந்த ஆய்வு பயணத்தின் விளைவாக 'ஜீவா முழக்கம்' சுதந்திரப் பொன் விழா மலர் ( 1997 ), ' தேச விடுதலையும் தியாகச்சுடர்களும்' ( 1998 ), ' விடுதலை வேள்வியில் தமிழகம்' – 2 பாகங்கள் ( 2001 ), 'சுதந்திரச் சுடர்கள்' ( 2016 ) ஆகிய எமது நூல்களும் பல முக்கிய இதழ்களில் எமதுகட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன.

'விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற எமது தொகுப்பு நூலின் மூன்றாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது. 'தினமணி ' யில் தினசரி வெளியான 'தமிழக தியாகதீபங்கள்' என்ற தலைப்பிலான எமது தொடர் கட்டுரைகளும் நூல் வடிவம் பெறவுள்ளது.விடுதலைப் போராட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்த பேரவை சார்பில் 2004 இல் தீர்மானிக்கப்பட்டது. 11.12.2004 ஆம் தேதி நடைபெற்ற பாரதி விழாவில்இதற்கான கல்வெட்டு அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்திய சுதந்திரத்தின் 75 -ஆம் ஆண்டை முன்னிட்டு இவ்வாண்டின் சிறப்புத் திட்டமாக இவ்வரலாற்று ஆய்வு மையத்தை முழுமைப்படுத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் தமிழகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், தமிழ்மண்ணில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களைப் பற்றிய நூல்கள், இவை பற்றியான M.Phil, PhD ஆய்வேடுகள், சிறப்பு மலர்கள், ஆவணங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், பதிவுகள் என எது இருந்தாலும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் பேரவைக்குக் கொடுத்துதவ வேண்டுகிறோம்.

தொடர்பு முகவரி : மக்கள் சிந்தனைப் பேரவை, A – 47 , சம்பத் நகர், ஈரோடு 638 011 , தொலைபேசி : 0424- 2269186 , மின்னஞ்சல் :info@makkalsinthanaiperavai.org

மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரசியல் கட்சி சார்பற்ற பொது நல அமைப்பாகும். இந்த அமைப்பின் அடிப்படை நோக்கங்களையும் இலட்சியங்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம்.மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நாட்டுப்பற்று மொழிப்பற்று மற்றும் சமூக உணர்வு ஏற்படப் பாடுபடுதல். இளைஞர்களைத் தன்னம்பிக்கைமிக்கவர்களாகவும், இடைவிடாது உழைத்து முன்னேறி அவரவர் துறையில் மிகச்சிறந்து விளங்கக் கூடியவர்களாகவும், தன்னலமற்ற தியாக உள்ளமும், சேவையுணர்வும் கொண்டவர்களாகவும் உருவாக்கப் பாடுபடுதல்.

நம் நாட்டின் பாரம்பாரியம் , பண்பாடு கலாசாரம், கலை இலக்கியம், வரலாறு முதலியவற்றை இளைய தலைமுறை முழுமையாக அறிந்து கொள்ளப் பாடுபடுதல். கடந்த கால இந்தியாவைப் படிப்போம், எதிர்கால இந்தியாவைப் படைப்போம் என்ற கோணத்தில் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதோடு, இன்றைய தேசபக்தி எது என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பாடுபடுதல். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டுவந்து நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல், கலப்படம், மோசடி முதலிய சமூக விரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil