அந்தியூரில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

அந்தியூரில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
X

அந்தியூரில் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாசின் 137-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது.

அந்தியூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாசின் 137-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸின் 137வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக ஈரோடு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, மாவட்ட அமைப்பாளர் அந்தியூர் பிரபு ஆகியோர் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் பச்சியப்பன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செல்வி, அந்தியூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் தேவி, அந்தியூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அந்தியூர் நகரத் தலைவர் சாமி, செயலாளர் மண்டலிங்கம், குமார், முத்துசாமி உள்ளிட்டோர் எஸ்.எஸ்.விஸ்வநாததாஸின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!