பவானி ஐயப்ப சங்கம் சார்பில் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்

பவானி ஐயப்ப சங்கம் சார்பில் 600 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
X

பவானி ஐயப்ப சுவாமி சேவா சங்கம் சார்பில் இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா சங்கம் சார்பில் 600 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்கம் சார்பாக பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்கும் விழா ஸ்ரீ பிரபாத் இண்டஸ்ரியல்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு ஸ்ரீ ஐயப்ப சுவாமி சேவா நலச் சங்க தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை வகித்தார்.


விழாவில், பவானி மற்றும் குமாரபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 600 ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சங்க உறுப்பினர்கள் நாராயண், மாதேஸ்வரன், ராமராஜு மற்றும் வேல்முருகன், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், செல்வம், ஜோதி, பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!