அந்தியூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

அந்தியூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

அந்தியூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அந்தியூர் கிழக்கு பள்ளியில் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிழக்கு பள்ளியில் நேற்று நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். கண் அறுவை சிகிச்சைக்காக செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!