சத்தியமங்கலத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

சத்தியமங்கலத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
X

இலவச கண் பரிசோதனை முகாம்.

ரங்கசமுத்திரம் நகராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஏ. ஆர் விஷன் கேர் சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள், வயதானவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், பார்வை குறைபாடு ஆகிய பரிசோதனைகளை செய்து கொண்டனர். மேலும் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்