அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!

அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி பகுதியில் 5ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்தனர். இதில் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து 4 பேருக்கும் மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஒரே பகுதியில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாம் அமைத்து சுகாதார பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் தங்கள் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், குடிநீரை முறை யாக பாதுகாக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்தி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணிகளும் செய்து வருகின்றனர்.

Next Story
Similar Posts
ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்!
சேலத்தில் ஓடும் பஸ்சில் இருந்து 9 மாதக் குழந்தை விழுந்து உயிரிழப்பு -  டிரைவர், கண்டக்டர் பணிநீக்கம்!
இலவச கண் சிகிச்சை முகாம்: 35 பேர் தேர்வு
தாராபுரத்தில் நள்ளிரவில் தனியார் பஸ் சிறைபிடிப்பு – பயணிகள் பரபரப்பு!
திருப்பதிக்கு பாதயாத்திரை: பக்தர்களின் அதிரடி பயணம்
கெங்கவல்லி மாரியம்மன் திருவிழாவில் பாரி வேட்டை தடுப்பு நடவடிக்கை
வாரச்சந்தையில் மது அருந்திய 8 நபர்களால் பரபரப்பு
ஈரோட்டில் வெப்பம் கொஞ்சம் குறைந்தது – மக்கள் பாதிப்பு தொடர்கிறது!
சேலத்தில் இருதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் வார விழா: விழிப்புணர்வு மற்றும் பயிற்சி
சேலத்தில் மிதிவண்டி மாரத்தான் போட்டி: ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு
பர்கூர் மலை சாலையில் வேன் கவிழ்ந்து பரபரப்பு!
16 வயது மாணவியை காதலித்த வாலிபரின் தலைவெட்டல்
கொல்லிமலையில் மழை: பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம்