பவானி அரசு மருத்துவமனையில் நாளை பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
முன்னாள் எம்பி என்.ஆர்.கோவிந்தராஜர்.
இது தொடர்பாக முன்னாள் எம்பி என்.ஆர்.கோவிந்தராஜர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முத்தமிழ் அறிஞரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது பிறந்த நாளான நாளை (ஜூன்.3ம் தேதி) ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு கருணா என பெயர் சூட்டி, தங்க மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசு பரிசாக அளிக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 10ம் தேதி அம்மாபேட்டை பெரியசாமி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், பேனா - பென்சில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும். தொடர்ந்து, கலைஞர் ஒரு காவியம் எனும் தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் வேலவன் வித்யாலயா துவக்கப்பள்ளி மற்றும் பெரியசாமி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
மேலும், கலைஞர் 101 எனும் தலைப்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இம்மாத இறுதியில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் அம்மாபேட்டை வேலவன் மகாலில் நடத்தப்படும். இதில், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பங்கேற்று பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். மேலும், மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் பங்கேற்று துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில், அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வேண்டும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu