பவானி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்

பவானி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்
X

பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.

வளர்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் , தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பண்ணன் கவுந்தப்பாடிபுதூர்,சின்ன கவுண்டனூர்,பொம்மன்பட்டி,நல்லகவுண்டனூர், கவுந்தப்பாடி விஐபி நகர், திருவிக நகர்,பெருமாபாளையம்,தன்யாசிபட்டி பற்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடிகால் அமைத்தல் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சத்தியபாமா,கோமதி அனிதா,ஆறுமுகம்,புஷ்பா மற்றும் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் கே சி கருப்பண்ணன் அதிகாரிகளுடன் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!