பவானி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திட்ட பணியை முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன், இன்று கேசரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, 27லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கேசரிமங்கலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் பங்கேற்று பூமி பூஜை திட்ட பணியை தொடங்கி வைத்தார். திட்டத்தை விரைந்து முடிக்க ஒப்பந்தாரர்க்கு அறிவுறுத்தினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu