அத்தாணி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்

அத்தாணி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
X

அத்தாணி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையன் பிரச்சாரம் மேற்காெண்டார்.

அத்தாணி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன் பிரச்சாரம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று, அத்தாணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கேஏ செங்கோட்டையன், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அத்தாணி பேரூராட்சியின் 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி. வேலு என்கிற மருதமுத்துவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர், அதிமுக வின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை கூறி பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.அப்போது, அனைத்து வார்டு வேட்பாளர்கள், அதிமுக.,வினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்