திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர்
X
அந்தியூரில் அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வேங்கையன். இவர் முன்னாள் அதிமுகவின் 17வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ் மற்றும் பேரூர் கழக துணைச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில், அதிமுக முன்னாள் வார்டு கவுன்சிலர் வேங்கையன் அதிமுகவிலிருந்து விலகி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகம். அந்தியூர் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன். பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் தங்கராசு , அந்தியூர் பேரூர் கழக வார்டு கழக நிர்வாகிகள் சையது முஸ்தபா. முத்து, செல்வன், வாசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி