3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்

3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
X

திமுகவில் இணைந்த அதிமுகவினர் உடன் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ.

அந்தியூரில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் கவுன்சிலர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்கள் பிரகாஷ், ராஜா (இருவரும் 7 வது வார்டு) மற்றும் மகாலிங்கம் (6வது வார்டு) மூன்று பேரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மூன்று பேரும் தங்களை அதிமுகவிலிருந்து விலகி அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி‌.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த 3 முன்னால் கவுன்சிலர்களை கட்சி எம்எல்ஏ வரவேற்றார். தொடர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதில் பிரகாஷ் அதிமுகவில் சீட் கிடைக்காததால், 7வது வார்டில் தற்போது சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதன் காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Tags

Next Story
future ai robot technology