சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது

சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
X

கைது செய்யப்பட்ட பூவேந்திரன், மணிகண்டன்.

சத்தி வனப்பகுதியில் உடுப்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட வடவள்ளி பகுதியில் வனவர் தீபக்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முருகன் கோவில் மேடு என்ற பகுதியில் பூவேந்திரன் (வயது 19), மணிகண்டன் (வயது 23) ஆகிய இருவரும், சுருக்கு கம்பி வைத்து உடும்பை வேட்டையாடி, சமைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!