ஈரோடு: தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு: தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
X

பைல் படம்.

குமலன்குட்டை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கிலோ தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டது.

ஈரோடு நகரில் உள்ள பல்வேறு உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதன்படி குமலன்குட்டை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தரமற்ற இறைச்சிகள் மற்றும் புரோட்டா இருப்பது கண்டறிய பட்டது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டது. மேலும், உணவகத்தில் இருந்த உணவுப்பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதிகாரிகளின் தீடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!