சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
X

பைல் படம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்வு. மல்லிகைப்பூ 1 கிலோ ரூ.945-க்கு விற்பனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று (29.08.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.945 ,

முல்லைப்பூ - ரூ.720 ,

காக்கடா - ரூ.700 ,

செண்டுமல்லி - ரூ.92 ,

கோழிக்கொண்டை - ரூ.88 ,

ஜாதி முல்லை - ரூ.550 ,

கனகாம்பரம் - ரூ.1,050 ,

சம்பங்கி - ரூ.100 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.160-க்கு விற்பனையானது.

மேலும், விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் விலை தற்போது உயர்ந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் பூக்கள் விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்