கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
X

கொடிவேரி அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், அணையில் குளிப்பதற்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைக்கும் இன்று (நவம்பர் 3) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், அணையில் குளிப்பதற்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைக்கும் இன்று (நவம்பர் 3) தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று (நவம்பர் 2) இரவு விடிய விடிய கனமழை பெய்ததின் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் வினாடிக்கு 866 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும், தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், அணையில் இருந்து பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுகின்றது.

இதனால், இன்று (நவம்பர் 3) ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்